மெரினா கடற்கரை செல்ல பொதுமக்களுக்கு தடை?

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கோவை, ஈரோடு, சென்னையில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதனையடுத்து பாதிப்புக்களை பொறுத்து மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் பொது மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நடைபயிற்சி செல்வதற்கு பலர் வருகிறார்கள். அவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.

நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதால் மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்காது. இருப்பினும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் தொடர்ந்து அறிவுரை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி: S. ரவூப்