சட்டசபை நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவர் வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு விழா நடக்கும் தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (President Ramnath Kovind) தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டி கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுப்பார். பின்னர் மாலை சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு வருகை தர உள்ளார்.

இதன் காரணமாக சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் சட்டமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படை ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர டிரோன் கேமராக்கள் மூலமாகவும் பாதுகாப்பு பணிகளை போலீசார் ஆய்வு செய்கிறார்கள்.