ஒருமுறை பாலை இப்படி காய்ச்சி குடித்து பாருங்கள். தொண்டையில் இருக்கும் சளி அத்தனையும் கரைந்து வெளியேறிவிடும்

ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவு பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த பால் நன்றாக காய்ந்து பொங்கி வரும் சமயத்தில் மஞ்சள் தூள்  1/2 ஸ்பூன், மிளகு தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பட்டை – 1 சிறிய துண்டு, சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். குறிப்பாக முக்கியமாக இறுதியாக பாலை இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு 1/2 ஸ்பூன் நெய் இதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்

.நல்ல கொழுப்புள்ள நெய் இறுதியாக இதில் சேர்ப்பதன் மூலம், இந்த பாலில் கலந்திருக்கும் அனைத்து விதமான சத்துகளும் நம் உடலில் சரியான முறையில் போய் சேரும். நெய் வாசம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நெய்க்கு பதிலாக 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தேங்காய் எண்ணெய் சுத்தமானது தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தொண்டை கரகரப்பு நீங்கும். சளி உடனடியாக வெளியேற்றப்படும். தினமும் காலையில் இந்த பாலை குடிக்கலாம். அப்படி இல்லை என்றால் இரவு தூங்கும்போது குடித்துவிட்டு தூங்கலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். முடிந்தவரை இதற்கு பசும்பாலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் பாக்கெட் பாலை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.