ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து தமன் இசையில் பாடிய அனிருத்!
ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பட்டா படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் அனிருத்.
இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கு திரையுலகின் பேசப்படும் நபராக மாறியிருக்கார். ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ் பதிப்புக்காக ஒரு பாடலை பாடியவர், இப்போது தமன் இசையில் மகேஷ்பாபு படத்துக்கு ஒரு பாடல் பாடியுள்ளார்.
இன்றைய இளம் இசையமைப்பாளர்களிடம் உள்ள நல்ல குணம், ஈகோ பார்க்காமல் அடுத்தவர்களின் இசையில் பாடுவதும், பங்களிப்பு செலுத்துவதும். யுவன், ஜீ.வி.பிரகாஷ், அனிருத், டிஇமான், சந்தோஷ் நாராயணன் உள்பட இளம்தலைமுறை இமேஜை ஓரமாக வைத்து வேலை செய்கிறது. ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். அது முதல் பாடலாக நேற்று வெளியானது. பாடலுக்கு இசை கீரவாணி.