ATM, டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மாற்றம்…
வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஹோம் பேங்க் ஏடிஎம்களில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு தகுதி பெறுவார்கள்.
கிரெடிட் கார்டு (Debit Card) அல்லது டெபிட் கார்டுகள் (Credit Card) மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணம் வங்கிகளால் வசூலிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின் படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஹோம் பேங்க் ஏடிஎம்களில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு தகுதி பெறுவார்கள்.
மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம்களிலிருந்து வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனைகளை கோரலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மெட்ரோக்களில் மூன்று பண பரிவர்த்தனைகளும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளும் அடங்கும்.
ஜூன் 2019 இல் ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. ஏடிஎம் கட்டணங்கள் முழுவதையும் மறுபரிசீலனை செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் இதில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது.