முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் கடிதம்
முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு புதிதாக முதுகலை மருத்துவ கல்வி வரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரைவு நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் ஏற்படுக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு,க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) கடிதம் எழுதியுள்ளார்.