டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா…

சமூக வலைதளங்களில் சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை மாற்றியிருக்கிறார் நடிகை சமந்தா.

தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை நடிகை சமந்தா மாற்றி உள்ளார். தற்போது ‘S’என்று மட்டுமே டிஸ்பிளே பெயர் உள்ளது. அதே சமயம் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சமந்தா அக்கினேனி என்று தான் உள்ளது.

திடீரென டிஸ்பிளே பெயரை சமந்தா மாற்றியதற்கு எந்த காரணமும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும் கணவருடன் கருத்து வேறுபாடு, கணவரை பிரியப் போகிறாரா சமந்தா, இதற்கு ஆரம்பமாக தான் தனது பெயரை மாற்றி உள்ளாரா என்று ரசிகர்கள் குழபப்தில் உள்ளனர். by TaboolaSponsored LinksYou May LikeWhy Offices are Going Cleaner and GreenerCNN with AccentureA Beacon Of Hope for Burmese YouthsOurBetterWorld.orgLearn More

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் குணசேகர் இயக்கும் சாகுந்தலம், கேம் ஓவர் டைரக்வர் அஸ்வின் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.