வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் தொகை ₹50,000 கோடி ரூபாய் : மத்திய அரசு தகவல்

  • 50 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை கோராமல் இருக்கிறது
  • இந்த தகவலை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ளது.
  • காப்பீட்டுக் பாலிஸியில் உரிமைகோரப்படாத தொகை ரூ .24,586 கோடியாக உள்ளது.

Unclaimed Amount In Banks: நாட்டின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் சுமார் ரூ .50,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது என்ற தகவலை அரசு நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ளது.  2020 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மதிப்பிட்டின் படி, வங்கிகளில் ரூ .5,977 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகை மக்கள் வங்கிகளில் முதலீடு செய்த பின் அதனை மறந்து விட்ட தொகை, அல்லது கிளைம் செய்ய இயலாத காப்பீட்டு தொகை ஆகியவை அடங்கும்.

₹50,000 கோடி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களிடம் உள்ளது

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பகவத் காரத், மார்ச் 31, 2020 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, நாட்டின் வங்கிகளில் உரிமை கோராத ரூ .24,356 கோடி தொகை உள்ளது. 2020 நிதியாண்டின் முடிவில், காப்பீட்டுக் பாலிஸியில் உரிமைகோரப்படாத தொகை ரூ .24,586 கோடியாக உள்ளது. இவை மொத்தம் 8.1 கோடி கணக்குகள் ஆகும். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கிகளில் உரிமை கோரப்படாத பணம், வைப்புத் தொகையாளர்களின் நலன்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்படலாம்.