ரூ.95,000 வரை உயரும் சம்பளம்…

ஜூன் மாத அகவிலைப்படியையும் அரசாங்கம் விரைவில் சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கும் என்ற செய்தி வந்துகொண்டிருக்கின்றது. அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 28% க்கு பதிலாக 31% ஆக உயரும்.

ஜூன் மாதத்திற்கான 3% டிஏ இன்னும் அதிகரிக்கவில்லை
ஜூன் 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance) இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான AICPI தரவுகளிலிருந்து 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. இது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்று ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் பக்கம்) சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். எனினும், எப்போது இது செலுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஊழியர்களின் சம்பளம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி.

2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2020 இல், 3 சதவிகிதம் அதிகரித்தது. இதற்குப் பிறகு, ஜனவரி 2021 இல் இது 4 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, இந்த மூன்று அதிகரிப்பால், அகவிலைப்படி மொத்தம் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது அது 28%ஐ எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவிகிதத்தை எட்டும் (17+4+3+4+3).

பே கிரேட் பொறுத்து சம்பளம் அதிகரிக்கும்
கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது, ஊழியர்களின் டிஏ 11% அதிகரித்துள்ளது, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் 28% என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

தற்போது சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? இதோ கணக்கீடு
7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மேட்ரிக்ஸ் படி, மத்திய அரசு ஊழியர்களின் நிலை -1 ன் சம்பள வரம்பு ரூ .18,000 முதல் ரூ .56900 வரை இருக்கும். அதாவது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000. செப்டம்பரில் மத்திய ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை குறைந்தபட்ச சம்பளம் கொண்டு கணக்கிடலாம்.