70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை..
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மற்றொரு மைல்கல்லை அடைந்தார். அவரது ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நேற்று 70 மில்லியனைத் தாண்டியது.
புதுடில்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மற்றொரு மைல்கல்லை அடைந்தார். அவரது ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நேற்று 70 மில்லியனைத் தாண்டியது. இதன் மூலம், சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல்வாதி ஆகியுள்ளார் பிரதமர் மோடி.
குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் 2009 ல் பிரதமர் மோடி ட்விட்டரைப் பயன்படுத்தத் தொடங்கினார். 2010 இல், அவருக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்கள் இருந்தனர்.
பிரதமர் மோடிக்குப் (PM Modi) பிறகு, அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் கணக்குகளில் போப் பிரான்சிஸின் ட்விட்டர் பக்கம் 53 மில்லியனுக்கும் அதிகமானஃபாலோயர்களைக் கொண்டுள்ளது.