ராயபுரம் யுனானி மருத்துவமனையின் சிறப்பான செயல்பாடுகள் :

1979- ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை, ராயபுரம், மேற்கு மாதா கோயில் சாலையில் உள்ள வட்டார யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிலையம் (அரசு யுனானி மருத்துவமனை) மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.

சென்னையில் இந்த மருத்துவமனை ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பல்வேறு போக்குவரத்து முறைகள் உடனடியாக கிடைப்பது மட்டும் இல்லாமல் இது எம். வி. நீரிழிவு மருத்துவமனைக்கு அருகில் உள்ளதால் இந்த மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் இல்லாமல் மக்கள் வருவது இலகுவாகிறது.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மேற்பார்வையாளர், பாதுகாப்பு பணி ஊழியர்கள் ஆகியோரின் அணுகுமுறைகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இரத்தம், சிறுநீர் பரிசோதனை கூடங்கள், எக்ஸ்-ரே, இ.சி.ஜி. போன்ற வசதிகள் இருப்பதால் மக்கள் உள்ளூர் மற்றும் சென்னையில் பிற பகுதிகளிலிருந்து நோயாளிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

இதில், சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, சிறுநீரக கல், தொடர் தலை வலி, காய்ச்சல், முதுகு, கை, கால் வலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதர நோய்களுக்குக்கும் இந்த மருத்துவமனையில் சிறப்பான யுனானி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த யுனானி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சேவை சிகிச்சையின் மூலம் பல லட்சம் மக்கள் மிகவும் பயன் அடந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : N.அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்