மதுரை செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க தென்னக ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை மனு
தென்மாவட்டத்தில் மதுரை, முதல் செங்கோட்டை, வரை இயங்கி வந்த பயணிகள் ரயில் கொரோனா பெருந் தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் தென்னக ரயில்வே மூத்த உதவி மேலாளர் DIVIL அவர்களை சந்தித்து பயணிகள் ரயிலை உடனே இயக்க கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்