திருச்சி மாவட்டம் மணப்பாறை அணியாப்பூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கதில் விவசாயிகளுக்கு கடன்தர மறுப்பு…
கடன்தர மறுப்பு கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்?
திருச்சி மாவட்டம் மணப்பாறை அணியாப்பூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கதில் விவசாயிகளுக்கு கடன்தர மறுப்பதாக கூறி சங்க அலுவலகத்தை தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயி சங்கதினர் முற்றுகை இட்டனர்
சங்கத்தில் பயிர்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு புதியகடன் அளிக்கவும் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையை வழங்ககும் வளர்ந்து வரும் கரும்புக்கு கடன் வழங்கவும் நிர்வாகிகள் மறுத்து வருவதாக கூறபடுகிறது இது குறித்து நிர்வாகிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அணியாப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர், தொடர்ந்து சங்கத்தின் தலைவர் மேற்பார்வையாளர் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு புதிய கடன்களை வழங்க நிர்வாகிகள் ஒப்புகொண்டனர்.இதை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் கலைந்து சென்றனர், போராட்டத்தில் சங்கத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் கே.செந்தில்குமார், மாவட்ட தலைவர் பொண்ணுசாமி, போராட்டகுழு தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்