கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்…
கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 56ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்கு இப்போது தான் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக ஸிகா வைரஸ் பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஸிகா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக 51 பேருக்கு அங்கு ஸிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது . 8 பேர் இன்னும் ஜிகா பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசால் மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்றும் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS:S.MD.ரவூப்