LPG Gas Cylinder இணைப்பு பெறுவது எளிதாகி விட்டது..

எல்.பி.ஜி இணைப்பு பெறுவது மிகவும் சுலபமாகிவிட்டது. இதில் பல புதிய வசதிகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன.

இந்த முகவரியை வெரிஃபை செய்தால் போதும். 

வாடிக்கையாளரின் குடும்பத்தில் எந்த எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் எரிவாயு ஏஜென்சியின் கேஸ் சிலிண்டர் இணைப்பு 
 உள்ளதோ, அந்த கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) இணைப்பு நிறுவனத்துக்குச் சென்று எரிவாயு இணைப்பு தொடர்பான ஆவணங்களை கொடுக்க வேண்டும். சரிபார்ப்பிற்குப் பிறகு, புதிய எரிவாயு இணைப்பு கிடைக்கும்.

புதிய இணைப்பில் எல்பிஜி மானியமும் கிடைக்கும்

இதில் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், இதில் அடிப்படை எரிவாயு இணைப்பில் கிடைக்கும் மானியம், அதே அடிப்படையில் எடுக்கப்பட்ட பிற இணைப்புகளிலும் கிடைக்கும். இத்தகைய எரிவாயு இணைப்புகளை உஜ்வலா திட்டத்தின் (Ujwala Scheme) கீழ் பதிவு செய்யலாம். உங்கள் ஆதார் அட்டை மற்றும் பழைய எரிவாயு இணைப்பு தொடர்பான ஆவணங்களின் நகலை எரிவாயு நிறுவனத்திற்கு கொடுத்து புதிய எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரே முகவரியில் பல எரிவாயு இணைப்புகளை எடுக்க முடியும்.

அனைத்து எரிவாயு இணைப்புகளும் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், எந்தவிதமான மோசடிக்கும் வாய்ப்பில்லை. ஒரே முகவரியில் பல எரிவாயு இணைப்புகளின் வசதியை அரசாங்கம் தொடர்ந்து விரிவுபடுத்துகிறது.