நெல்லையை வென்றது திருப்பூர்…

திருப்பூர் தமிழன்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட் செய்த நெல்லை அணி 19.5 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் 43 ரன்னும், அர்ஜுன் மூர்த்தி 35 ரன்னும் எடுத்தனர். மேலும் திருப்பூர் அணி சார்பில் ராஜ்குமார், மொகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேடிங்க செய்த சித்தார்த் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மான் பாப்னா நிதானமாக விளையாடி அரை சதமடித்தார். இறுதியில், திருப்பூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மான் பாப்னா 51 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.