தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு…
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். தனுஷ் 43 (Dhanush) படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.