செல்போனை ஒட்டுக்கேட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுகிறது – நாராயணசாமி குற்றச்சாட்டு..

செல்போன்களை ஒட்டுகேட்டு பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.

இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை நரேந்திர மோடி அரசானது மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி அனைவரின் செல்போனை ஒட்டுக்கேட்டு பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப் நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தி வருவதாகவும், எனவே உடனடியாக நாடாளுமன்ற நிலை குழு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்பதால் நரேந்திர மோடி அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நமது நாட்டில் தற்போது செல்போன் ஒட்டு கேட்பு சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதாகவும், இஸ்ரேல் நிறுவனமாக உள்ள என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாகவும், இது மிகப்பெரிய ஊழல் என்றும், இதை பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு பயன்படுத்தி வருகிறது என்றும், பலரது ரகசிங்களை தெரிந்துகொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.