நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!- ராமதாஸுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ்-க்கு ட்விட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராமதாஸிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.