திருப்பூர் vs சேலம்; சேலம் அணி அசத்தல் வெற்றி
சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பெராரியோ 40 ரன்கள் எடுத்தார். அபிஷேக் 38 ரன்களும் எடுத்தார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது.
இதில் கேப்டன் பிரான்சிஸ் அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார். இறுதியில், திருப்பூர் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலம் அணி சார்பில் பெரியசாமி, முருகன் அஷ்வின், பிரனேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.