Ration card முக்கிய செய்தி: அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றம்
சில மோசடி நபர்கள் ரூ.1000 பெறும் வகையில் ரேஷன் கார்டுகளில் தேவையான மாற்றங்களை செய்து தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாக பல புகார்கள் வந்துள்ளன.
இதற்கிடையில் எந்தெந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Carholders) ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற பெரிய குழப்பமும் மக்களிடையே உள்ளது. ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியின் பெயர் மட்டும் இருந்தால் போதுமா? புகைப்படமும் இருக்க வேண்டுமா? என பல கேள்விகள் மக்களிடம் உள்ளன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் தமிழக அரசின் சார்பில் வெளிவரவில்லை.
இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில மோசடி நபர்கள் ரூ.1000 பெறும் வகையில் ரேஷன் கார்டுகளில் தேவையான மாற்றங்களை செய்து தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் பல புகார்கள் வந்துள்ளன.