NASA – SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- வியாழன் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டம்
- பூமியிலிருந்து சுமார் 390 மில்லியன் மைல்கள் (63 கோடி கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது வியாழன் கிரகம்.
- இந்த பயணம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வியாழன் கிரகத்தில் உயிர்களைத் தேடும் பணியில், ஆய்வினை தொடங்க எலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யுரோப்பா கிளிப்பர் (Europa Clipper) என்னும் இந்த மிஷன் திட்டத்தில், 2024 அக்டோபர் மாதத்தில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் ஹெவி ராக்கெட் (Falcon Heavy rocket) ஏவப்படும் என்று தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையே இதற்காக $178 மில்லியன் ஒப்பந்தம் கையெழுத்தானது.