Covishield: தமிழகத்திற்கு 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள்
கொரோனா மூன்றாவது அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,830 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், கொரோனா தொற்று காரணமாக 24 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID-19) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,44,870 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,862 ஆக அதிகரித்துள்ளது.