சென்னை ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் IPS, தெரிவித்துள்ளார்!

சென்னை ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் IPS, தெரிவித்துள்ளார்!

சென்னை: ரவுடிகள் முழுமையாக ஒடுக்கப்படுவார்கள் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்,IPS, தெரிவித்துள்ளார்,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிர்பயா பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நல பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிக்கா கூடுதல் ஆணையர் தேன்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனை மையம்:

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-
சென்னை காவல்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆலோசனை மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையமானது மூன்று வருடங்கள் தொடர்ந்து செயல்படும்.

புகார்கள்:

நேரடியாக இங்கு புகார் அளிக்க வருபவர்களுக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண் 181 மூலம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் புகார்கள் மூலம் வருபவர்களுக்கு இங்கு ஆலோசனை வழங்கப்படும்.

இங்கு பெண்கள் ஆலோசகர், குழந்தைகள் ஆலோசகர், சட்ட ஆலோசகர் என மூன்று ஆலோசகர்கள் உதவி கேட்டு வரும் பெண்களுக்கு உதவுவார்கள்.

ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்!

நீதிமன்ற உத்தரவின்படி இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிர்பயா நிதியின் கீழ் சென்னையில் ஒரு மையமும், தாம்பரத்தில் ஒரு மையமும், எழும்பூரில் ஒரு மையமும் என மூன்று மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் ரவுடிகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகிறார்கள்.

Dear என்னும் சிறப்பு நடவடிக்கை மூலம் ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தீவிர கண்காணிப்பு
கடந்த 10 ஆண்டுகளில் வருடங்களில் ரவுடிகள் செயல்பாடுகளின் படி வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை நேரடியாக தாக்குபவர்கள், மாமுல் வசூலிப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக சுமார் 39 ரவுடிகள் உள்ளனர். அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ரவுடிகள் முழுமையாக ஒடுக்கப்படுவார்கள். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

NEWS: S.MD. ரவூப்