Ola Electric Scooter: 10 அழகிய வண்ணங்களில் கலக்க வருகின்றன ஓலா ஸ்கூட்டர்கள்!!

ஓலா எலக்ட்ரிக் வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது மின்சார ஸ்கூட்டர் 10 தனித்துவமான மற்றும் துடிதுடிப்பான வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • மின்சார ஸ்கூட்டர் 10 தனித்துவமான மற்றும் துடிதுடிப்பான வண்ணங்களில் கிடைக்கும்.
  • நிறுவனம் நேற்று இந்த தகவலை வெளியிட்டது.
  • முதல் நாள் முன்பதிவிலேயே ஓலா சாதனை படைத்தது குறிபிடத்தக்கது.

ஓலா மின்சார ஸ்கூட்டரின் (Ola Electric Scooter) விலையைப் பற்றிய எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. வரும் நாட்களில் ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை நிறுவனம் முன்பதிவுகளைத் துவக்கிய பிறகு, முதல் 24 மணி நேரத்தில் ஓலா ஸ்கூட்டர் 1 லட்சம் முன்பதிவுகளை பதிவு செய்தது. Olaelectric.com இல் தங்கள் ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கு ரீஃப்ண்டபிள் டெபாசிட்டாக ரூ .499-ஐ செலுத்தி முன்பதிவு செய்யும் நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஹோம் டெலிவரி அளிக்கப்படும்.

மின்சார இரு சக்கர வாகன் துறையில் முன்னோடியாக இருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள், Ola Futurefactory என்ற உலகின் மிகப்பெரிய தொழிற்சலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்த தொழிற்சலை அதி நவீன வசதிகளோடு தமிழகத்தில் 500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் செயல்படும்.