டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது
டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதுடெல்லி: டெல்லி காவல்துறை தலைநகரில் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது. இன்று ஜந்தர் மந்தரில் ‘கிசான் பஞ்சாயத்து’ போராட்டத்தை விவசாயிகள் தொடங்கவுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால அமர்வின் போது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த விவசாய சங்கங்களுக்கு புதன்கிழமை அனுமதி கிடைத்துள்ளது.
டெல்லியின் (Delhi) சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், டெல்லியின் மையப்பகுதியில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 போராட்டக்காரர்கள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வேளான் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு (Farmers Protest) தலைமை தாங்கி வரும் விவசாயிகள் அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவிடம் (SKM), அனைத்து கோவிட் -19 விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் எதிர்ப்பு போராட்டம் அமைதியானதாக இருக்கும் என்றும் உறுதிமொழி கேட்கப்பட்டது.