CBSE 12 ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றியுள்ளது…

CBSE 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு 2021 க்கான முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 12 ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றியுள்ளது. 

CBSE Class 10th, 12th Exam 2021 results: CBSE 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு 2021 க்கான முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றியுள்ளது. இதனால், மாணவர்களின் காத்திருப்பு இன்னும் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 21 க்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இப்போது ஜூலை 22 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு முடிவுகளை (Exam Results) பள்ளிகள் இறுதி செய்ய வேண்டும் என கல்வி வாரியம் பள்ளுகளுக்கு கூறியுள்ளது. ஜூலை 21 ஆம் தேதி ஈத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஆகையால் இன்று தேசிய விடுமுறை நாள் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“ஜூலை 21 அன்று நாடு முழுவதும் ஈத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அதன்படி, ஜூலை 21 விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ உடன் இணைந்த அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை இறுதி செய்வதற்கு, கடைசி தேதி ஜூலை 22 ஆகும், “என்று சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையில் கூறியுள்ளது.