5,000 ரூபாய் பென்சன்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

ஓய்வுக் காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்சன் வாங்குவதற்கு உடனே இந்தத் திட்டத்தில் சேருங்கள்…கடைசிக் காலத்தில் நிலையான பென்சன் வாங்க நினைப்பவர்கள் எந்தத் திட்டத்தில் இப்போது இணையலாம் என்று யோசிப்பார்கள். பல்வேறு பென்சன் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும் மாதம் 5,000 ரூபாய் பென்சன் வழங்கும் அடல் பென்சன் திட்டத்தை நிறையப் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். அமைப்பு சாரா துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாக அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 சதவீதம் கூடுதல் ரிட்டன் லாபம் கிடைத்துள்ளது.