11 நிமிட பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம்உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

விண்வெளியில் ஜெஃப் பெசோஸ்: 11 நிமிட பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம்உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்துள்ளனர்.

இந்த பயணத்தில் ஜெஃப் பெசோஸின் சகோதரர் மார்க் பெசோஸ், 1960களில் விண்வெளி போட்டிக்கான பயிற்சியில் முன்னோடி பங்கேற்பாளராக அறியப்படும் 82 வயது வேலி ஃபங்க், 18 வயது மாணவர் ஆலிவர் டேமென் ஆகியோரும் ஜெஃப் பெசோஸுடன் சென்றனர்.

மிகப்பெரிய ஜன்னல்களுடன் கூடிய விண்கலன் பூமியில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. அதில் இருந்தபடி பூமியின் கண்கொள்ளா காட்சியை அனுபவித்த இந்த குழுவினர் பின்னர் பூமிக்கு திரும்பினர்.

நியூ ஷெப்பர்ட் ராக்கெட், பெசோஸின் சொந்த நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உடைய தயாரிப்பாகும். எதிர்கால விண்வெளி சுற்றுலாவை நோக்கமாகக் கொண்டு இந்த விண்கலன் மற்றும் மறுபயன்பாடுக்கு உகந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் முதலாவது பயணத்தில் ஜெஃப் பெசோஸுடன் பயணம் செய்தவர்களில் மிக அதிக வயதுடையவராக வேலி ஃபங்கும், மிகவும் இளையவராக 18 வயது மாணவர் ஓலிவர் டேமென்னும் கருதப்படுகிறார்கள்.

டெக்சாஸின் வான் ஹார்னுக்கு உருகே உள்ள தனியார் ராக்கெட் ஏவுதளத்தில் பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 2 மணி 12 நிமிடங்களுக்கு இவர்களின் விண்கலனை சுமந்தவாறு ராக்கெட் விண்ணை நோக்கி புறப்பட்டது.tju tv reporter n razak