படப்பிடிப்பில் நடிகர் விஷால் பலத்த காயம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் நடித்துவருபவர் நடிகர் விஷால்.

தற்பொழுது விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் Enemy என்ற படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் வெளிடு குறித்து எந்த செய்தியும் இன்னும் வெளிவரவில்லை.

Enemy படத்தை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் தனது 31வது படத்திற்காக ஹைதராபாத் Ramoji film சிட்டியில் கலந்து நடித்து வருகிறார்.

ஏற்கெனவே அப்பட படப்பிடிப்பில் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டு அந்த செய்தி Viral ஆகி வந்தது.

மீண்டும் படப்பிடிப்பில் அவருக்கு அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது .

சமூகவலைத்தளங்களில் அந்த வீடியோ வெளியாகி Viral ஆகி வருகிறது.

தற்பொழுது பிசியோதரப்பி சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறாராம் நடிகர் விஷால்.

தமிழ் மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன்