கோவைக்கு கொரோனா வெப்சைட் உருவாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு…
கோவை மாவட்டத்தில் தினமும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பயத்தால் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள அதிக அளவில் மக்கள் கூடுகின்றனர்.
தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்குச் சிறப்பான வலைதளத்தை உருவாக்கக் கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆம் அதன்படி ஜூலை 26ஆம் தேதிக்குள் வெப்சைட்டை ஒன்றை உருவாக்கிப் பதிவு செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களின் விவரங்கள், முன்பதிவு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்சான்று பெறுதல், தடுப்பூசிகள் செலுத்தியவர்களின் தரவுகள் உள்பட அனைத்து விவரங்களைப் பெறுவதற்கான வெப்சைட்டை உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறந்த வலைத்தளத்தை உருவாக்குபவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை பரிசுத் தொகையும் அளிக்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.