அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் கொடுக்கும் செம ஷாக்…


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து மீண்டும் 58ஆக மாற்ற திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அரசு ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58ஆக குறைக்க முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வருகின்றன. இந்த முறையும் போதிய நிதி இல்லை என்ற போதிலும் அதை சமாளிக்க புதிய யுத்தியை அரசு கையாள உள்ளதாக கூறுகிறார்கள். அதாவது செட்டில்மெண்ட் தொகையை பணமாக அல்லாமல், இரு ஆண்டுகள் கழித்து பெற்று கொள்ளும் வகையில் பாண்ட் பத்திரமாக கொடுக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறதாம். இது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.