பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட்… இப்படியும் ஒரு மோசடியா…!

மகளிர் உள்ளிட்டோரின் சமூக நலனுக்காக அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை, சில நடத்துனர்கள் தங்கள் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

மகளிர் உள்ளிட்டோரின் சமூக நலனுக்காக அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை, சில நடத்துனர்கள் தங்கள் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெறியாகி இருக்கின்றது. சேலம் ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற டவுன் பஸ் ஒன்றை டிக்கெட் பரிசோதகர்கள் நிறுத்தி பரிசோதனை செய்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 ஆண் தொழிலாளர்களின் கைகளில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட் இருப்பதை டிக்கெட் பரிசோதகர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, நடத்துனர் இந்த டிக்கெட்டுகளை தங்களுக்கு கொடுத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தலா 6 ரூபாய் வீதம் வசூல் செய்ததாக கூறியுள்ளனர். அவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்வர்கள், என்பதால் இது இலவச டிக்கெட் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடத்துனர், இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.