ஜிகா வைரஸால் சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கும்: தடுக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஜிகா வைரஸ் பாதிப்பால் சிறிய தலைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும், ஜிகா வைரஸ் பரவலை தடுக்க எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளபட்டு இருப்பதகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.வீட்டை சுற்றி இருக்கும் நன்னீர்தான் ஏடீஸ் கொசு உற்பத்தி மையம் என தெரிவித்த அவர், ஏடீஸ் கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 14,833 வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றது என தெரிவித்த அவர், கொசுவின் லார்வா நிலையிலேயே நீர் நிலைகளில் மீன்களை வளர்த்து, கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.