முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம்….

தில்லியில், திமுகவை சேர்ந்த எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நண்பகல் 12 மணிக்கு சந்திக்கிறார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை  சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குடியரசு தலைவருடன் மேற்கொள்ள உள்ள இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வு, எழு பேர் விடுதலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.