தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் (Tamil Nadu), நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் வடக்கு கடலோர மாட்டங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.