ஊரடங்கு தளர்வுகள் தொடருமா? எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்!

ஊரடங்கு தளர்வுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.

இந்த சூழலில் சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கேஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு பெரிய அளவில் ஒரு அச்சம் இருந்தாக வேண்டும். ஏனென்றால் இந்த தொற்றில் இருந்து நாம் விடுபட்டு விட்டோம் என்ற எண்ணம், மனநிலை யாருக்கும் வந்துவிடக் கூடாது. காரணம், இந்த தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை”