WHOஎடுத்த அதிரடி முடிவு…

வூஹான் மையத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், கொரோனா தோற்றம் குறித்து ஆராய புதிய குழுவைச் சீனாவுக்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலேயே அனைத்து நாடுகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா மக்களிடையே பரவதொடங்கி 1.6 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த காலத்தில் கொரோனாவுக்கு எதிரான வேக்சினும் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும்கூட கொரோனாவின் தோற்றம் இன்னும்கூட மர்மமாகவே உள்ளது. கொரோனா விலங்கில் இருந்து தோன்றியதா அல்லது ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறியதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.