இலங்கை கேப்டன் அதிரடி…

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, ஐபிஎலில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவனும், பயிற்சியாளராக ராகுல் திராவிட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இத்தொடர் குறித்து இலங்கை அணிக் கேப்டன் தஷுன் ஷனகா பேசியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “இந்த தொடரில் எந்த அணியும் ஒன்றைவிட மற்றொன்று பெரிது எனக் கூறமுடியாது. இரு அணியும் சமமாகத்தான் இருக்கிறது. இந்திய அணியில் பல புதுமுக வீரர் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஐபிஎலில் சிறப்பாக விளையாடியிருந்தாலும்கூட, சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக விளையாடியது கிடையாது” எனக் கூறினார்.