ரிலையன்ஸ் பவுண்டேஷன், செவாலியர் ரோச் சொசைட்டி அமைப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
கொரோனா தொற்று காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 800 நபர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உதவிகளை செய்த ரிலையன்ஸ் பவுண்டேஷன், செவாலியர் ரோச் சொசைட்டி அமைப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கொரோனா தொற்று காலகட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதால், ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் செவாலியர் ரோச் சொசைட்டி தொண்டு நிறுவனம் பல்வேறு இடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ,நாட்டுப்புற கலைஞர்கள், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் 800 க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா, 1200 மதிப்புள்ள
அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கினர்.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட இந்த அத்தியாவசிய பொருட்கள்
செவாலியர் ரோச் சொசைட்டி தொண்டு நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 800 பேர்களுக்கு குறிப்பாக நலிவடைந்தவர்களுக்கு நேரடியாக சென்று உதவிகள் செய்தனர்.
கொரோனா தொற்று காலகட்டத்தில் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், எய்ட்ஸ் தொற்றுமூலம் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார்800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்த ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் செவாலியர் ரோச் சொசைட்டி தொண்டு நிறுவன அமைப்பு மேலும்
பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு சுமார் 20 ஆயிரம் முகக்கவசம், 5 ஆயிரம் சனிடைசர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கினார்கள். இந்த செயல்களை தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் பாராட்டியதோடு அவர்களின் சிறந்த சேவையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்த மனிதநேயமிக்க செயல்களை செய்துவரும் மேற்கண்ட அமைப்புகள் செயல்பாடுகளை ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் நலிவடைந்த பல்வேறு தரப்பினருக்கு உதவிய ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் செவாலியர் ரோச் சொசைட்டி தொண்டு நிறுவன அமைப்புகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.செந்தில்ராஜ் பாராட்டியதோடு மேற்கண்ட அமைப்புகளின் சேவையை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த பாராட்டு சான்றிதழ்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து செவாலியர் ரோச் சொசைட்டி தொண்டு நிறுவன அமைப்பு துணை இயக்குனர் மேன்லி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜிடம் பாராட்டு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார். நிகழ்வில் சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர் செல்வராஜ்
தூத்துக்குடி