சாலை விபத்தில் உயிரிழந்த காவலருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை…
சாலை விபத்தில் உயிரிழந்த காவலருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்
தருவைக்குளம் காவல் நிலைய காவலர் கனகவேல் சாலை விபத்தில் நேற்று உயிரிழந்த அவரது உடலுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தருவைக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கனகவேல் (26), அவரது சொந்த ஊரான சூரங்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு, தருவைக்குளம் காவல் நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வடக்கிலிருந்து தெற்காக திரும்பி வரும்போது பாலார்பட்டி விலக்கில் வந்தபோது எதிரே வந்த டாட்டா ஏஸ் என்ற வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று (17.07.2021) அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மாவட்ட ஆயுத்ப்படை காவல் துணை கண்காணிப்பளார் கண்ணபிரான், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் முருகன், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கலா, ஆயுதப்டை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, தூத்துக்கு நகரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன், தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின் அவரது உடல் கோவில்பட்டி இலுப்பையூரணி, மறவர் காலணியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்படுகிறது.
செய்தியாளர் செல்வராஜ்
தூத்துக்குடி