ஒரு சில தாவரங்களை வீட்டில் வளர்த்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவும்

ஒரு சில தாவரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. மீறி வளர்த்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவும் என்றும் கூறப்படுகிறது.

முள் உள்ள செடிகளையும், மரங்களையும் வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும், ஓரிரு செடிகளுக்கும் மரத்திற்கும் சாஸ்திர விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

வீட்டில் முள் இருக்கக்கூடிய கள்ளி செடிகளை வளர்க்கக் கூடாது. சிலபேர் இதனை அழகுக்காக வீட்டில் வளர்ப்பது உண்டு. கட்டாயம் இந்த கள்ளி செடிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் உடையது என்றும்
கூறப்படுகிறது.

மேலும் எதிர்மறை ஆற்றல்களை வீட்டை நோக்கி ஈர்க்கக் கூடியது என்றும் கூறப்படுகிறது.

மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை வளரும் செடிகளை கிழக்கு சார்ந்த தென்கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும். இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் எந்த வகையான செடி மற்றும் மரங்களை வைக்க கூடாது.

முள் இருக்கும் செடிகளை வளர்ப்பதால் வீட்டில் உள்ளவர்களிடையே தேவையில்லாத வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல போன்சாய் மரங்களும் வளர்க்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. மேலும் வீட்டின் அருகே புளிய மரங்களை வளர்க்கக்கூடாது

மேலும் இதன் அருகில் வீடு கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் உலர்ந்து காய்ந்து போன தாவரங்கள் இருந்தால், அதனை அப்படியே விடாமல் அவ்வப்போது அப்புறப்படுத்துவது நல்லது. அதே போல் வீட்டில் உள்ளே வளர்க்கப்படும் தாவரங்களும் காய்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

பருத்தி செடிகளை வீட்டை சுற்றியும் வளர்ப்பதும் தவறானது என்றும் கூறப்படுகிறது. சிறிய செடிகளை வடக்கு பகுதிகளில் வைத்து வளர்ப்பதை தவிர்க்கவேண்டும். அதேபோல வீட்டின் முன்புறம் அதிக உயரமுள்ள மரங்கள், அதிக தடிமனான மரங்களையும் வளர்க்கக் கூடாது.

இவற்றையெல்லாம் முறையாக கடைப்பிடித்தால் நம் வீட்டில் அதிர்ஷ்டம் வரும் எனவும் கூறப்படுகிறது.

NEWS: S.MD. ரவூப்

தமிழ்மலர் மின்னிதழ்