சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 4 பேர் கைது

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 4 பேர் கைது – 414 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது – 414 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கோவில்பட்டி கிழக்கு, கொப்பம்பட்டி, புதூர் ஆகிய 3 காவல் நிலைய போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (14.07.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 414 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் செல்வராஜ்

தூத்துக்குடி