இஸ்லாமியர் ஸ்டைலில் நெய்ச்சோறு!

இஸ்லாமியர்களின் வீட்டு ஸ்டைலில் ரொம்பவும் டேஸ்ட்டியான நெய் சாதம் செய்து கொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம்

தேவையான பொருட்கள்!

அரிசி – 1 கிலோ
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
புதினா – சிறிதளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – கால் கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்
ஏலக்காய்- 2,
பட்டை- 2,
கிராம்பு -2,
தயிர் – கால் கப்,
எலுமிச்சை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை!

வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், புதினா சேர்த்து வதக்கவும்.

அடுத்து அரிசி அத்துடன் இரண்டு மடங்கு தண்ணீர் உப்பு, தயிர் ,எலுமிச்சை ஜூஸ் கலந்து ஒரு விசில் விட்டு இறக்கினால் நெய் சாதம் ரெடி, அனைவரும் ஒன்றிணைந்து பகிர்ந்து சாப்பிடலாம்.

செய்தி:S.MD. ரவூப்