சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறை…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு
July 12, 20218 min read
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 09.07.2021 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எதிரிகள் மூன்று பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும், தூத்துக்குடி கோமஸ்புரம் அருகே ஒரு பாலத்திற்கு அடியில் இருந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி 4 எதிரிகளை கைது செய்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் சங்கர், சரண்யா தலைமை காவலர்கள் ஜீசஸ் ரோசாரியோ ராஜன், முத்துராஜ், முதல் நிலை காவலர்கள் சுந்தர்சிங், திருமணி, பாலகுமார், காவலர்கள் சிலம்பரசன், ஆனந்தகுமார், மாதவன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு எதிரிகள் 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 06.07.2021 அன்று குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலை சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் 3 பேரை கைது செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி, திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தனிப் பிரிவு தலைமை காவலர் தாமஸ் மேத்யூ, தலைமை காவலர் ஹரிதாஸ், காவலர்கள் சுந்தர்ராஜ் மற்றும் ஆனந்த் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார். செய்தியாளர் செல்வராஜ் – தூத்துக்குடி