ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

அதே நேரம் இணையவழி புகார் முறையும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் சில கடைகளில் எடை குறைவாக பொருட்களை விநியோகிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் நியாயவிலைக்கடைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு கடையிலும் புகார் பதிவேடு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் புகார் தெரிவித்தால், அதன்மீது தொடர்புடைய அலுவலர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

இணையவழியில் புகாரை தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் பதிவேடு முறையை கடைபிடிக்க ஆணையாளர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள இணையவழி புகார் தெரிவிக்கும் முறையுடன் பதிவேடு முறையையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

செய்தி: S.MD. ரவூப்