சென்னை மெட்ரோ ரயில் அதிரடி மாற்றம்..

சென்னை மெட்ரோ ரயில் நேரங்களில் அதிரடி மாற்றம்!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஜூலை 12 முதல் காலை 5.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் வருகின்ற திங்கள்கிழமை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளன.

மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடஇடைவெளியில் இயக்கப்படும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் . பயணிகள் முகக்கவசம் அனியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ .200 வசூலிக்கப்படுகிறது .

அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது .

A அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்