கவர்னராக தாவர்சந்த் கெலாட் …

தாவர்சந்த் கெலாட் கர்நாடக புதிய கவர்னராக பதவியேற்றார்

கர்நாடக புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் வஜூவாய் வாலா. கடந்த 6½ ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கவர்னர் பதவியில் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, கர்நாடகத்திற்கும் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். அதாவது மத்திய மந்திரியாக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், கர்நாடகத்தின் 19-வது கவர்னராக தாவர்சந்த் கெலாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்றார்.

ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் புதிய கவர்னரான தாவர்சந்த் கெலாட்டுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்

செய்தியாளர் ரகஹ்மான்
தமிழ் மலர் மின்னிதழ்