தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் வழங்க சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட
ஆட்சியர் செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கி வருகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின்
ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின்
ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 % வட்டி , பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 % வட்டி பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை /முதுகலை தொழிற்கல்வி / தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும்,
திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 வட்டி மாணவியர்களுக்கு 5 வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களைச்சார்ந்த சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்/திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச்சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலத்திய இரசீது/செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்கனையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான கல்விக் கடன், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்கான கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட விபரப்படியான இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் பயன்படுத்தி பொளாதார மேம்பாடு அடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் நாள் மற்றும் நேரம்

20.07.2021 (செவ்வாய்) தூத்துக்குடி – மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி லிட்., 109/5டீ, எட்டயபுரம் ரோடு, போல்பேட்டை, தூத்துக்குடி முற்பகல் 10.00 முதல்
பிற்பகல் 5.00 மணி வரை

27.07.2021 (செவ்வாய்) திருச்செந்தூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, பேருந்து நிலையம் அருகில் திருச்செந்தூர்
முற்பகல் 10.00 முதல்
பிற்பகல் 5.00 மணி வரை

30.07.2021 (வெள்ளி) கோவில்பட்டி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட்., கோவில்பட்டி கிளை வளாகம் (நகராட்சி அலுவலகம் அருகில்) கோவில்பட்டி
முற்பகல் 10.00 முதல்
பிற்பகல் 5.00 மணி வரை”

இத்தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் . கி. செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.