இலங்கை கிரிக்கெட் தள்ளிவைப்பு..

இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக, ஜூலை 13-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிரேமதாச மைதானத்தில் நடக்கும். இதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கும்.